ADDED : செப் 25, 2025 03:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலம் : கொல்லியங்குணம் பவ்டா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் இலக்கிய பேரவை விழா நடந்தது.
தமிழ்த்துறை சார்பில் நடந்த விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சுதா கிறிஸ்டி ஜாய் தலைமை தாங்கினார். மாணவர்கள் சுவாதி, அபிநயா வரவேற்றனர்.
பவ்டா கல்விக் குழும இயக்குநர் பழனி வாழ்த்தி பேசினார். விளையாட்டு அகாடமி ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் அறிமுகவுரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் சேகர் நோக்கவுரையாற்றினார்.
செங்கல்பட்டு அச்சிறுபாக்கம், உயிர் வலுவாக்க மைய நிறுவனர் ஜூலியஸ் வனத்தையன் 'நான் ஏன் எழுதுகிறேன்?' தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியை ஹீரா பவானி தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி ஆதி பாக்கியம் நன்றி கூறினார்.