/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆய்வு
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆய்வு
ADDED : ஜூலை 19, 2025 11:57 PM

விழுப்புரம்: விழுப்புரம் சட்டசபை தொகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க., மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க.,விற்கு உட்பட்ட விழுப்புரம், வானுார் சட்டசபை தொகுதிகளில் 569 ஓட்டு சாவடிகளில் ஒரு அணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது.
மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்து கள ஆய்வு செய்து வருகிறார். இதையொட்டி, நேற்று அய்யங்கோவில்பட்டு, நன்னாடு, தோகைப்பாடி, கொண்டங்கி, சத்திப்பட்டு, மரதகபுரம், கண்டம்பாக்கம், கப்பூர் ஆகிய ஊராட்சிகளில் 200க்கும் மேற்பட்ட ஓட்டு சாவடிகளில் உறுப்பினர் சேர்க்கை பற்றியும், அரசு திட்டங்களில் பயனை பெற்றுத்தருவது தொடர்பாக கூறினார்.
ஒன்றிய செயலாளர் ராஜா, சேர்மன் சச்சிதானந்தம், துணை சேர்மன் உதயகுமார், அவை தலைவர் கண்ணப்பன், கவுன்சிலர் நவநீதம் மணிகண்டன் உட்பட கோலியனுார் மத்திய ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

