/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டம்
/
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூட்டம்
ADDED : ஜூலை 15, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுாரில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார்.
நாராயணசாமி வரவேற்றார். செயலாளர் மண்ணாங்கட்டி அறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் கடந்த மாத வரவு செலவு அறிக்கை வாசித்தார்.
கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கான கருவூல நேர்காணலை பழைய படி ஜூலை, ஆகஸ்ட்,செப்டம்பர், மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும்; ஓய்வூதியர்களுக்கான மருத்துவ படியை 300 ரூபாயிலிருந்து மத்திய அரசை போல 1000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க உறுப்பினர் சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.