/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழக வெற்றிக் கொள்கை திருவிழா மாநாடு மேடை அலங்கார இறுதிகட்ட பணிகள் தீவிரம்
/
தமிழக வெற்றிக் கொள்கை திருவிழா மாநாடு மேடை அலங்கார இறுதிகட்ட பணிகள் தீவிரம்
தமிழக வெற்றிக் கொள்கை திருவிழா மாநாடு மேடை அலங்கார இறுதிகட்ட பணிகள் தீவிரம்
தமிழக வெற்றிக் கொள்கை திருவிழா மாநாடு மேடை அலங்கார இறுதிகட்ட பணிகள் தீவிரம்
ADDED : அக் 24, 2024 12:53 AM

விக்கிரவாண்டி : நடிகர் விஜய் துவக்கி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு, வரும் 27ம் தேதி, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை என்ற இடத்தில் நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளுக்கான இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநாட்டிற்கு 'தமிழக வெற்றிக் கொள்கை திருவிழா' என பெயரிட்டு, அதை மேடையின் முகப்பில் பெரிய எழுத்தில் வடிவமைத்துள்ளனர். மாநாட்டு முகப்பு வாயிலில் கட்சி கொடியில் இடம் பெற்றுள்ள பிளிறும் இரட்டை யானை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மதில் சுவர் வடிவில் டிஜிட்டல் பேனர் அமைத்து, அதன் மேல் மெகாசைஸ் விஜய் படம் பொருத்தி வருகின்றனர்.
திடலில் 1,500 பேர் அமரும் வீதம் தடுப்புகள் அமைத்து, பச்சை நிற தரை விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதித்தபடி 55 ஆயிரம் சேர்கள் போடப்பட உள்ளது. கூடுதலாக வரும் தொண்டர்கள் நின்றபடி பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டு திடலில், தொண்டர்களை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் 3 கி.மீ., துாரத்திற்கு கட்சிக் கொடிகள், சீரியல் விளக்குகள், சாலையின் நடுவே ஹைமாஸ் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் நேரடியாக மேடைக்கு செல்ல தனி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் போது போக்குவரத்தை சீரமைப்பதற்காக, கட்சி சார்பில், போலீசாருக்கு 100 பேரிகார்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அடுத்த வில்லியனுாரில் பேட்டியளித்த வி.சி. தலைவர் திருமாவளவன், 'நடிகர் விஜய் கட்சி மாநாடு வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்' என கூறினார்.