/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி டேங்க் ஆப்பரேட்டர் தர்ணா
/
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி டேங்க் ஆப்பரேட்டர் தர்ணா
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி டேங்க் ஆப்பரேட்டர் தர்ணா
நிலுவை சம்பளம் வழங்கக்கோரி டேங்க் ஆப்பரேட்டர் தர்ணா
ADDED : செப் 22, 2025 11:34 PM
விழுப்புரம்: விழுப்புரத்தில் சம்பளம் நிலுவை வழங்கக்கோரி ஊராட்சி டேங்க் ஆப்பரேட்டர் தர்ணாவில் ஈடுபட்டார்.
விழுப்புரம் அருகே ஆலாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம், 50; ஊராட்சி டேங்க் ஆப்பரேட்டர். இவர், தனக்கான சம்பள நிலுவையை வழங்க வலியுறுத்தி, நேற்று காலை குடும்பத்துடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம், கலெக்டரிடம் மனு அளிக்குமாறு அனுப்பி வைத்தனர்.
அவர் மனு விபரம்:
எங்கள் ஊராட்சியில் கடந்த 2008ம் ஆண்டு முதல் டேங்க் ஆப்பரேட்டராக உள்ளேன். எனது மாத சம்பளம் 4,400. கடந்த 3 மாத சம்பளம் வழங்கவில்லை. ஏற்கனவே 2016ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சம்பள நிலுவை தர வேண்டும். தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டும் சம்பள நிலுவை வழங்காமல் அலைகழித்து வருகின்றனர்.
இதனால், எனது குடும்பம் வறுமையில் தவிப்பதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.