ADDED : டிச 17, 2025 06:57 AM

வானுார்: ராயப்பேட்டையில் இருந்து நெசல் வரை 3 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் புதிய தார் சாலை போடும் பணி துவங்கியது.
வானுார் அடுத்த ராயப்பேட்டையில் இருந்து நெசல் வரை உள்ள சாலை படுமோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சாலையை புதுப்பித்து தரக்கோரி அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ராயப்பேட்டையில் இருந்து நெசல் வரை 5 கி.மீ., துாரத்திற்கு 3 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி துவக்க விழா நேற்று நடந்தது. விழாவில் ஒன்றிய சேர்மன் உஷா முரளி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
வானுார் பிடிஓ.,க்கள் மணிவண்ணன், சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய பொறியாளர் குகன் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முரளி, ஒப்பந்தாரர் நந்தகுமார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் எத்திராஜ், ஏழுமலை, ஊராட்சி தலைவர் ரஹமதுல்லா, மாவட்ட பிரதிநிதி பாலு, விவசாய அணி துணை அமைப்பாளர் ராமமூர்த்தி, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் விஜயபாஸ்கர்.
விளையாட்டு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பாஸ்கர், சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் ராஜதுரை, ஊராட்சி தலைவர் ரஹமதுல்லா, கிளைச் செயலாளர்கள் ஆனந்த், அமிர்தராஜ், மகளிர் அணி அனுசுயா உட்பட பலர் பங்கேற்றனர் .

