/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்குகள் மோதி விபத்து; டாஸ்மாக் ஊழியர் பலி
/
பைக்குகள் மோதி விபத்து; டாஸ்மாக் ஊழியர் பலி
ADDED : ஏப் 07, 2025 06:42 AM
மயிலம்; மயிலம் அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் டாஸ்மாக் ஊழியர் இறந்தார்.
வானுார் அடுத்த நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ், 49; தீவனுார் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 12:15 மணிக்கு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார்.
தழுதாளி கிராமம் அருகே சென்றபோது, சேதராப்பட்டு தனியார் கம்பெனியில் பணி முடித்து வீடு திரும்பிய வீடூர், கணபதி பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் மகன் விக்னேஷ், 30; ஓட்டி வந்த பைக், செல்வராஜ் ஓட்டி வந்த பைக் மீது நேருக்கு நேர் மோதியது.
விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மயிலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, வழியில் செல்வராஜ் இறந்தார். விக்னேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.