/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் கடைகளை 2 நாள் மூட உத்தரவு
/
டாஸ்மாக் கடைகளை 2 நாள் மூட உத்தரவு
ADDED : ஜன 14, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில்உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகளும் வரும் 15 மற்றும் 26ம் தேதிகளில் மூட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் பழனி, விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
நாளை 15ம் தேதி திருவள்ளுவர் தினம் மற்றும் வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அந்த இரண்டு நாட்களும் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.