/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம் பேச்சுவார்தையால் ஒத்திவைப்பு
/
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம் பேச்சுவார்தையால் ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம் பேச்சுவார்தையால் ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைக்கு பூட்டு போராட்டம் பேச்சுவார்தையால் ஒத்திவைப்பு
ADDED : அக் 13, 2024 07:57 AM
திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே 2 டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் அதிகாரிகள் பேச்சுவார்தையால் ஒத்தி வைக்கப்பட்டது.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கரடிப்பாக்கம் மற்றும் பெரியசெவலை பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பள்ளிக்கு அருகாமையிலும் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி வேறு இடத்தில் அமைக்கக்கோரி வன்னியர் சங்கத்தினர் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
நடவடிக்கை எடுக்காததால் வன்னியர் சங்கத்தினர் நாளை (14ம் தேதி) இரு கடைகளையும் மூடி பூட்டு போட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
தகவலறிந்த வருவாய்துறை அதிகாரிகள் வன்னியர் சங்க நிர்வாகிகளை அழைத்து நேற்று காலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சாமி தலைமையில், பா.ம.க., நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடைகளை 30 நாட்களில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதனையொட்டி, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.