/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரிபாக்கி... ரூ.17.2 கோடி ; வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
/
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரிபாக்கி... ரூ.17.2 கோடி ; வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரிபாக்கி... ரூ.17.2 கோடி ; வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
விழுப்புரம் நகராட்சி பகுதியில் வரிபாக்கி... ரூ.17.2 கோடி ; வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரம்
ADDED : ஜன 25, 2024 05:30 AM
விழுப்புரம் : விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் மொத்தம் ரூ.17 கோடியே 2 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களுக்கான பாக்கியுள்ளது. இதை வசூலிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்டு மொத்தம் 42 வார்டுகள் அமைந்துள்ளது. இந்த வார்டுகளில் பொதுமக்கள் தங்களின் வீட்டு வரி, தண்ணீர், பாதாள சாக்கடை, குப்பைகளுக்கான வரிகளை விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
நகராட்சியில் உள்ள 42 வார்டுகளுக்கான வரிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் பெரும் பகுதி பாக்கியுள்ளது. இதில் சொத்து வரி ரூ. 6 கோடியே 62 லட்சமும், அரசு கட்டடங்களில் ரூ. 2 கோடியே 22 லட்சமும், குடிநீர் இணைப்பு கட்டணம் ரூ.2 கோடியே 22 லட்சம் வரிபாக்கி நிலுவையில் உள்ளது.
அதே போல், காலிமனை வரி ரூ.69 லட்சமும், தொழில்வரி ரூ.1 கோடியே 87 லட்சம், குத்தகை இனங்களில் ரூ.1 கோடியே 13 லட்சம், பாதாள சாக்கடை கட்டணம் ரூ.1 கோடியே 60 லட்சம் உட்பட மொத்தம் ரூ.17 கோடியே 2 லட்சம் வரி மற்றும் வரியில்லா இனங்களில் வரி செலுத்தாமல் நிலுவை உள்ளது.
இந்த வரிகளை வசூ லிக்க, நிலுவை வைத்துள்ள நிலுவைதாரர்களுக்கு நகராட்சி அலுவலர்கள், உடனே வரி செலுத்தக் கோரி அனைத்து வித அறிவிப்புகளை வழங்கியுள்ளனர். நகராட்சிக்கு வரிபாக்கி வைத்துள்ள நிலுவைதாரர்கள் வரியை சிரமமின்றி செலுத்தும் வகையில், வரும் மார்ச் 31ம் தேதி வரை சனி, ஞாயிற்று கிழமைகள் உட்பட காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை பழைய நகராட்சி அலுவலக கட்டடம், புதிய நகராட்சி அலுவலக கட்டடத்தில் கணினி வசூல் மையம் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிலுவைதாரர்கள் வரி செலுத்துவதற்காக ஆன்லைன் https://tnurbanepay.tn.gov.in மூலமாகவும் விழுப்புரம் நகராட்சியை தேர்வு செய்து வரி மற்றும் வரியில்லா இனங்களின் தொகையை செலுத்த சிறப்பு வசதிகளை செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக, நகராட்சி ஆணையர் ரமேஷ் கூறியதாவது;
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டுகளில் உள்ள நிலுவைதாரர்கள், நகராட்சி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதியை பயன்படுத்தி உரிய வரியை துரிதமாக செலுத்த வேண்டும்.
இல்லையேல் ஜப்தி நடவடிக்கை, குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதை தவிர்த்து பொதுமக்கள், நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.