/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆட்சியில் வரிகள் உயர்வு: விழுப்புரம் அ.தி.மு.க., கண்டனம்
/
தி.மு.க., ஆட்சியில் வரிகள் உயர்வு: விழுப்புரம் அ.தி.மு.க., கண்டனம்
தி.மு.க., ஆட்சியில் வரிகள் உயர்வு: விழுப்புரம் அ.தி.மு.க., கண்டனம்
தி.மு.க., ஆட்சியில் வரிகள் உயர்வு: விழுப்புரம் அ.தி.மு.க., கண்டனம்
ADDED : அக் 12, 2024 11:05 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில், தெற்கு நகர அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
நகர செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் கதிரவன், பிரதிநிதி செந்தாமரை கண்ணன், நகர துணைச் செயலாளர் கணேஷ் சக்திவேல் முன்னிலை வகித்தனர். நுார் ஜியாவுதீன் வரவேற்றார். பாலாஜி தீர்மானங்களை வாசித்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், சொத்துவரி, மின் கட்டணம், பால் விலை, பத்திர பதிவு கட்டணம், குடிநீர் வரி உயர்வால் மக்களை பாதிப்புக்கு ஆளாக்கிய தி.மு.க., அரசின் செயல்பாடுகளை கண்டிப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அற்புதவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல், தகவல் தொழில் நுட்பப்பிரிவு கோகுல், மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் முத்தையன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி சேர்மன் தங்கசேகர்.
கவுன்சிலர் செல்வம், மாவட்ட வர்த்தகர் அணி இணைச் செயலாளர் செந்தில்வேலன், நகர வர்த்தக அணி செயலாளர் ரகுராமன், நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.