/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சரஸ்வதி கல்விக் குழுமத்தில் ஆசிரியர் தின விழா
/
சரஸ்வதி கல்விக் குழுமத்தில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 05, 2025 09:54 PM

விழுப்புரம்:
விழுப்புரம் சரஸ்வதி கல்விக் குழுமம் சார்பில் ஆசி ரியர் தின விழா நடந்தது.
விழுப்புரம் சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, சோழகனுார் சரஸ்வதி எக்சல் மெட்ரிக் பள்ளி, வி.பாளையம் சென்ட்ரல் சி.பி.எஸ்.இ., பள்ளி மற்றும் விழுப்புரம் அஸ்வினி மருத்துவமனை ஆகியவை ஸ்ரீ அண்ணாமலை கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகின்றன.
இந்த கல்விக் குழுமத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்து வரும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் பள்ளியில் நடந்த விழாவில், சரஸ்வதி கல்வி குழும சேர்மன் ரவீந்திரன், பொருளாளர் சிதம்பரநாதன், பள்ளி தாளாளர் ராஜசேகரன், நிர்வாக இயக்குநர் முத்துசரவணன் ஆகியோர் உரையாற்றி ஆசிரியர்களின் சமூகப் பணி, அர்ப்பணிப்பு மற்றும் கல்வி வளர்ச்சியில் பங்கினை பாராட்டி வாழ்த்தினர். தொடர்ந்து, சரஸ்வதி எக்சல் மெட்ரிக் பள்ளி நிர்வாக அலுவலர் முத்து சிவஞானம், திலகவள்ளி ஜூவல்லரி முத்துகிருஷ்ணன் , கயிலை சிவக்குமார், கோல்டன் மார்பிள்ஸ் பிரேம்நாத், டாக்டர்கள் வெங்கடேஷ், நடராஜன், சரஸ்வதி மெட்ரிக் பள்ளி முதல்வர் யமுனாராணி, சரஸ்வதி எக்சல் மெட்ரிக் பள்ளி முதல்வர் இந்துமதி, சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் சுபஸ்ரீ, அஸ்வினி மருத்துவமனை மேலாளர் கிருபாராணி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.