/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல இணைப்பதிவாளரிடம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனு
/
மண்டல இணைப்பதிவாளரிடம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனு
மண்டல இணைப்பதிவாளரிடம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனு
மண்டல இணைப்பதிவாளரிடம் ஆசிரியர்கள் கூட்டமைப்பு மனு
ADDED : செப் 25, 2025 03:45 AM

விழுப்புரம், : தீபாவளி பண்டிகைக்கு முன் பங்கு ஈவு தொகை வழங்கக்கோரி மனு கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் விஜயசக்தியை, திருவெண்ணெய்நல்லுார் வட்டார ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஜாக்டோ - ஜியோ சார்பில் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது, பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன் பங்கு ஈவு தொகை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பொன்னுசாமி, தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வட்டார செயலாளர் ரவி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் குமரவேலு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க வட்டார செயலாளர் யுவராஜ் உடனிருந்தனர்.