/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேளாண் நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி
/
வேளாண் நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி
ADDED : அக் 13, 2025 12:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்; திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலையத்தில் இறவை சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி மற்றும் இடுபொருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கணபதி வரவேற்றார். திட்ட ஒருங்கிணைப்பாளர் திருவசரன் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண் விரிவாக்க கல்வி இயக்க இயக்குநர் முருகன் பங்கேற்று விவசாயிகளுக்கு தென்னங்கன்று, உயிர் உரங்கள் போன்ற இடுபொருட்களை வழங்கினார்.
இந்த பயிற்சியில் சிபி செபஸ்டியன், செந்தமிழ், ஜமுனா, ஆனந்தி, விஜய கீதா ஆகியோர் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட செயல்பாடுகள் குறித்து தொழில்நுட்ப உரை ஆற்றினர்.
இதில், 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.