/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கழிவுநீர் கால்வாய் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
கழிவுநீர் கால்வாய் சேதம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : அக் 13, 2025 12:41 AM

திண்டிவனம்; கழிவுநீர் கால்வாய் உடைந்து இரும்பு கம்பிகள் வெளியில் தெரிவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்து வருகின்றனர்.
திண்டிவனம் நகராட்சி, அப்புக்குட்டி தெருவில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சாலையோரத்தில், கால்வாய் அமைத்து கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதை சீரமைக்கும், பணிகள் சில மாதங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, கால்வாயை உடைத்து சேதப்படுத்தினர். இதை தொடர்ந்து, அதை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அதிலிருக்கும் இரும்பு கம்பிகள் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. இது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான முறையில் உள்ள கம்பிகளை அகற்றி, கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.