UPDATED : அக் 24, 2026 01:10 AM
ADDED : அக் 24, 2026 01:07 AM

விழுப்புரம்: அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், கணினி அறிவியல், தகவல் தொழில் நுட்பத் துறை மற்றும் கேப்பெபல் இந்தியா நிறுவனம் சார்பில், தொழில் நுட்ப பயிலரங்கம் நடந்தது.
இரண்டு நாட்கள் நடந்த பயிலரங்கிற்கு, கல்லுாரி முதல்வர் அன்பழகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் பெங்களூரு கேப்பெபல் நிறுவன பொறியாளர் வினித் மோத்குரு சிறப்புரையாற்றினார்.
பயிரலங்கில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில் நுட்பம் வளர்ச்சி, எதிர்காலம், அதனை கையாளுதல் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று, ஏ.ஐ., தொழில் நுட்பம் குறித்து கலந்துரையாடினர். துறை தலைவர் சாதிக்பாஷா மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
