UPDATED : அக் 24, 2026 01:10 AM
ADDED : அக் 24, 2026 01:08 AM

செஞ்சி: அப்பம்பட்டில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
செஞ்சி அடுத்த அப்பப்பட்டில் உள்ள பலவை அமைப்பு, இந்திய சமூகக் கழகம், பழங்குடியினர் மையம், சிறகுகள் அறக்கட்டளை, அறிவுச்சுடர் கல்வி மையம் சார்பில் இளைஞர்களுக்கான மூன்று நாள் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
இதில் இளைஞர்களிடையே ஜனநாயக விழிப்புணர்வையும் குடியுரிமை குறித்த புரிதலையும் மேம்படுத்தும் நோக்கில் ஜனநாயகம் மற்றும் குடியுரிமை என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கப்பட்டது. செல்வகுமார், அருள் பிரகாஷ் ஆகியோர் பயிற்சியளித்தனர். பயிற்சி முகாமில் 35 இளைஞர்கள் பங்கேற்றனர்.
முகாமில், இன்றைய சமூகச் சூழலில் இளைஞர்கள் ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகள், குறித்தும், ஜாதி, மதம், மொழி, பாலினம் குறித்து மனிதர்களிடையே பாகுபாடு காட்டக் கூடாது. குடிமக்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும் என பயிற்சி அளித்தனர்.
