/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : பிப் 15, 2024 06:33 AM

திண்டிவனம், : திண்டிவனத்தில் காதல் திருமணம் செய்த இளம் பெண், தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம், தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்த சித்ரா மகள் அபிநயா, 23. இவரும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தை உள்ளது.
திருமணத்திற்கு பிறகு, முருங்கப்பாக்கம், மாணிக்கம் நகரில் வசித்து வந்தனர். மணிகண்டன் பூ வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று பிற்பகல் 1:00 மணியளவில், அபிநயாவின் தாய் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அபிநயா எடுக்கவில்லை.
சந்தேகமடைந்த அவர் மகள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டிற்குள் அபிநயா துாக்கில் தொங்கி நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினரின் உதவியுடன், அவரை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அபிநயா வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து சித்ரா, அளித்த புகாரின் பேரில், ரோஷணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அபிநயாவிற்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

