/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தொலைதுார மருத்துவ மையம் துவக்க விழா
/
தொலைதுார மருத்துவ மையம் துவக்க விழா
ADDED : ஜூலை 19, 2025 03:06 AM
கண்டமங்கலம் : கண்டமங்கலம் அடுத்த முட்ராம்பட்டு சத்யா கிராம மறுவாழ்வு மையத்தில் தொலைதுார மருத்துவ மையம் துவக்க விழா நடந்தது.
புதுச்சேரி சத்யா சிறப்பு பள்ளி, அரியூர் வெங்கடேஸ்வராமருத்துவக் கல்லுாரி மருத்துவமனைசார்பில் நடந்த விழாவிற்கு, வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் ராமச்சந்திரன் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். விஜயா சந்திரசேகரன் வரவேற்றார். சத்யா சிறப்பு பள்ளியின் இயக்குநர் சித்ராஷா பேசினார்.
டாக்டர்கள் மகோதேவன், பரதலட்சுமி, ஆர்த்தி, ஆரோக்கியயாதி, இந்திய தொலைதுார மருத்துவ சங்க கவுரவ செயலாளர் உமாசங்கர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், தொலைதுார மருத்துவம் குறித்து செயல் விளக்கத்தை கிராமப்புற மக்களுக்கு விளக்கப்பட்டது. சத்யா சிறப்புப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் முனுசாமி நன்றி கூறினார்.