/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும்: உதவி ஆணையர்
/
கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும்: உதவி ஆணையர்
கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும்: உதவி ஆணையர்
கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும்: உதவி ஆணையர்
ADDED : அக் 18, 2024 07:17 AM

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அறநிலையத்துறை கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்படும் என உதவி ஆணையர் சக்திவேல் கூறினார்.
விழுப்புரம் இந்து சமய அறநிலையதுறை அலுவலகத்தில், புதிய உதவி ஆணையராக சக்திவேல் நேற்று பொறுப்பேற்றார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழக அரசு சார்பில், இந்து சமய அறநிலையத்துறை கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கவும் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நிலுவை வாடகை, வரிகள் வசூலிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
ஏற்கனவே, செங்கல்பட்டில் பணியாற்றியபோது, 800 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்திலும், கோவிலுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்பு புகார் வந்தால் நடவடிகை எடுத்து மீட்கப்படும்.
கோவிலுக்குச் சொந்தமான கடை வாடகை, வரிகள் நிலுவை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.