ADDED : அக் 14, 2024 09:55 PM
விழுப்புரம் : ரயில் விபத்து எதிரொலியாக, தெற்கு ரயில்வே துறையில் தண்டவாளங்களை முறையாக சோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வே துறையில் அதிகாரிகளின் பணிகள் சார்ந்த நடவடிக்கைகளில் துரிதம் காட்டப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில் நிலையம் மற்றும் தண்டவாளங்களில் தினசரி உள்மாவட்டம் மட்டுமின்றி முக்கிய வெளி மாநில ரயில்கள் செல்லும் தடங்களில் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்ய வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவு போட்டுள்ளனர்.
இதையொட்டி, அதிகாரிகள் டிராலி மூலம் தண்டவாளங்களை அதிரடியாக ஆய்வு செய்த பின், அதிவேக விரைவு ரயில்கள் செல்வதோடு, தண்டவாள ஜாயிண்ட்டுகள் பாயிண்ட்டுகள் அனைத்தையும் ரயில்வே ஊழியர்கள் தினந்தோறும் சோதனை செய்து வருகின்றனர்.

