/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
37வது மாநில சதுரங்க போட்டி விழுப்புரத்தில் துவங்கியது
/
37வது மாநில சதுரங்க போட்டி விழுப்புரத்தில் துவங்கியது
37வது மாநில சதுரங்க போட்டி விழுப்புரத்தில் துவங்கியது
37வது மாநில சதுரங்க போட்டி விழுப்புரத்தில் துவங்கியது
ADDED : மே 02, 2025 07:11 AM

விழுப்புரம்: தமிழக மாநில அளவிலான 37வது சதுரங்க போட்டி விழுப்புரத்தில் துவங்கியது.
விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில், ஜெயசக்தி மண்டபத்தில் நேற்று காலை போட்டிகள் துவுங்கியது. விழுப்புரம் மாவட்ட சதுரங்க கழக கவுரவ தலைவர், அர்ச்சனா ஓட்டல் உரிமையாளர் சுப்புராமன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். சதுரங்க கழக மாவட்ட தலைவர் ஓமணகிருஷ்ணன், செயலாளர் நெடுஞ்செழியன், பொருளாளர் கண்ணன், துணைத் தலைவர்கள் வேணுகோபால், சம்பத், தசரதன், இணை செயலாளர்கள் ராஜ்குமார், ஈஸ்வர்ராஜ், ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டிகள், வரும் 4ம் தேதி வரையில் 9 சுற்றுகளாக நடக்கிறது. 7 வயதிற்குட்பட்ட பிரிவிற்கு நடைபெறும் போட்டியில் விழுப்புரம் மட்டுமின்றி கடலுார், சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருநெல்வேலி, துாத்துக்குடி, திருச்சி, கன்னியாகுமரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300 சிறுவர், சிறுமியர் பங்கேற்றனர்.
போட்டியின் நடுவர்களாக சர்வதேச சதுரங்க நடுவர் விசாலாட்சி, துணை நடுவர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெறுவோருக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், பங்கேற்ற அனைவருக்கும் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டிகளின் முடிவுகள் உடனுக்குடன், சதுரங்க கழகம் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. மாநில செஸ் போட்டியில் தேர்வாகும் 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் உட்பட 4 பேர், தேசிய அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்கும் தகுதியை பெறுவர்.