/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நெருப்பு கையால் நடிகரின் படத்தை தீட்டிய ஓவியர்
/
நெருப்பு கையால் நடிகரின் படத்தை தீட்டிய ஓவியர்
ADDED : ஏப் 11, 2025 06:32 AM

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார்பேட்டையை சேர்ந்தவர் ஓவியர் செல்வம். இவர் நெருப்பு எரியும் கையால் 'குட்பேட் அக்லி' திரைப்படத்திற்காக நடிகர் அஜித்குமார் ஓவியத்தை தீட்டி அசத்தியுள்ளார்.
'குட்பேட் அக்லி' திரைப்படம் வெற்றி பெறவும், இந்த படம் தீயாய் இருக்கும் என்பதை குறிக்கும் வகையில் ஓவியர் செல்வம் நேற்று நெருப்பை எறியவிட்டு நடிகர் அஜித்குமாரின் ஓவியத்தை தீட்ட முடிவு செய்தார். இதையொட்டி, அவர் சாக்கு பையை தனது கையில் சுருட்டி, அதன் மேலேயே துணியை கட்டி கொண்டு, இரும்பு பைப்போடு கூடிய மார்க்கரை பிடித்து எச்சரிக்கையோடு தனது கையில் மேலேவுள்ள துணியில் நெருப்பை பற்ற வைத்து தீ எரியும் கையால் நடிகர் அஜித்குமார் படத்தை நான்கு நிமிடங்களில் வரைந்து அசத்தியுள்ளார். இவரின் திறமையை கண்டு, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அஜித்குமார் ரசிகர்கள் ஓவியர் செல்வத்தை பாராட்டினர்.