/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்
/
எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா துவக்கம்
ADDED : மே 01, 2025 05:18 AM
வானூர்: ராவுத்தன்குப்பம் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா துவங்கியது.
வானூர் அடுத்த ராவுத்தன்குப்பம் எல்லையம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று முன்தினம் துவங்கியது.
வரும் 5ம் தேதி வரை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. 6ம் தேதி காலை 11:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல், பகல் 2:00 மணிக்கு காளி வள்ளான் கோட்டை அழித்தல், அம்மன் பரி வேட்டையாடுதல் நடக்கிறது.
மாலை 6:00 மணிக்கு, செடல் உற்சவம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் தேரில் அம்மன் எழுந்தருளி, தேர் வீதியுலா நடக்கிறது. 7ம் தேதி மாலை 5;30 மணிக்கு காத்தவராயன் சுவாமிக்கும், ஆரியமாலா, கருப்பழகி சுவாமிக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம பொது மக்கள் செய்துள்ளனர்.