/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் : பொன்முடி பேச்சு
/
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் : பொன்முடி பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் : பொன்முடி பேச்சு
மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திய முதல்வர் : பொன்முடி பேச்சு
ADDED : பிப் 16, 2026 06:52 AM
விக்கிரவாண்டி: 'தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்திய ஸ்டாலின் முதல்வராக தொடர வேண்டும்' என பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.
விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் என்னென்ன திட்டங்களை செயல்படுத்தியுள்ளார் என்பது பொதுமக்களாகி உங்களுக்கு நன்றாக தெரியும். பனையபுரம் கூட்ரோடு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்திருந்தீர்கள். அதற்கான பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கல்வியும், சுகாதராமும் சிறந்து விளங்குவதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைதான். மகளிருக்கான மாநிலமாக திகழ்கிறது. அதனால் 2 நாட்களுக்கு முன் மகளிர் உரிமைத் தொகை 5,000 ரூபாய் வழ ங்கியுள்ளார்.
மகளிர் முன்னேற்றத்திற்காக தி ட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பஸ்சில் கட்டணமில்லா பயணத்தை ஏற்படுத்தி திராவிட மாடல் ஆட்சி தந்தவர் ஸ்டாலின். கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறார். மருத்துவ வசதி பெற முண்டியம்பாக்கத்தில் மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்தியது திராவிடமாடல் ஆட்சியில் தான்.
கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என கூறும் முதல்வர் ஸ்டாலின் வழியில் தமிழகத்தினை செயல்படுத்தி வருபவர் துணை முதல்வர் உதயநிதி. பெரியார் கூறிய படி ஆணும் பெண்ணும் சமம் என்ற கொள்கையை நிலை நாட்டி வருவது திராவிட மாடல் ஆட்சி தான். அதனால்தான் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக தொடர வேண்டும்.
இவ்வாறு பொன்முடி எம்.எல்.ஏ., பேசினார்.

