/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.15 கோடி கோவில் நிலம் மீட்பு; அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை

ADDED : நவ 13, 2024 08:29 AM

விழுப்புரம், : விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான 7.66 ஏக்கர் நிலத்தை போலீஸ் பாதுகாப்புடன், அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வளவனுார் குமாரகுப்பத்தில் சுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 7.66 ஏக்கர் நஞ்சை நிலம், சாலையாம்பாளையம் கிராமத்தில் புதிய பைபாஸ் சாலை அருகே உள்ளது. அந்த நிலங்களை குத்தகைக்கு பயிர் செய்து வந்த விவசாயிகள், கடந்த 14 ஆண்டுகளாக கோவிலுக்கு குத்தகை செலுத்தாமல், நிலத்தை ஆக்கிரமித்து பயிரிட்டு வந்தனர்.
அதையடுத்து அறநிலையத்துறை இணை ஆணையர், சட்டப்பிரிவு 78 கீழ், கோவில் நிலங்களை மீட்க உத்தரவிட்டார். நேற்று, அறநிலைய துறை உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில், கோவில் நிலங்கள் பிரிவு தனி தாசில்தார் ராஜன் முன்னிலையில், கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை அளவீடு செய்து, 7.66 ஏக்கர் நிலத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைத்தனர். வளவனுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.