/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மகளை எரித்து கொல்ல முயன்ற மருமகனை கொன்ற மாமனார்
/
மகளை எரித்து கொல்ல முயன்ற மருமகனை கொன்ற மாமனார்
ADDED : நவ 13, 2024 10:54 PM
வந்தவாசி; விழுப்புரம் மாவட்டம், கிளியனுாரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜா, 35. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த ஆலத்துாரை சேர்ந்த சகாதேவன், 65, என்பவரின் மகள் ருக்கு, 30. இருவருக்கும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. தம்பதிக்கு, இரு மகன்கள் உள்ளனர்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையான ராஜா, தன் மாமனார் வசிக்கும், ஆலத்துார் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
கிடைக்கும் பணத்தில் மது குடித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் சுற்றி வந்தார். மேலும், மனைவி மீது சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் இரவு, மது குடிக்க ருக்குவிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். பணம் தரமறுத்த ருக்குவை கொல்ல, அவர்மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அலறித் துடித்த ருக்குவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மாமனார் சகாதேவன், உருட்டுக் கட்டையால் தாக்கியதில், மருமகன் ராஜா, பலியானார். கீழ்கொடுங்காலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

