/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
/
சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டம்
ADDED : நவ 12, 2024 08:18 PM

விழுப்புரம்; விழுப்புரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், விழுப்புரம் நகராட்சி திடலில் நேற்று நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகிதேவி வரவேற்றார். மாவட்ட துணை தலைவர்கள் காசி, துரை, மாவட்ட இணைச் செயலாளர்கள் உமா, லதா, பொன்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் சரவணன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் வீமன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்கம் மாவட்ட செயலாளர் சிவக்குமார், டாம்சா மாநில செயலாளர் பார்த்திபன், வருவாய்த்துறை அலுவலர் சங்கம் பொதுச் செயலாளர் சங்கரலிங்கம், பேரூராட்சி ஊழியர் சங்கம் பாலமுருகன், ஜெய்சங்கர், அஜிஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
சத்துண ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை, அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தனர். சிஐடியு மாவட்ட செயலர் மூர்த்தி நிறைவுரையாற்றினார்.