/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பவ்டா கல்லுாரியில் பேரவை துவக்க விழா
/
பவ்டா கல்லுாரியில் பேரவை துவக்க விழா
ADDED : பிப் 09, 2025 06:43 AM

மயிலம்: பவ்டா கலை, அறிவியல் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் பேரவை துவக்க விழா நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு, முதல்வர் சுதா கிறிஸ்டிஜாய் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சேகர், வேதியியல் துறை தலைவர் பாலகணேஷ் முன்னிலை வகித்தார். மாணவி ஐஸ்வர்யா வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கல்லுாரி வேதியியல் துறை இணை பேராசிரியர் வைத்தியநாதன் 'முப்பரிமாண மாற்றிய வேதியியல்' தலைப்பில் பேசினார்.
விழாவில், பேராசிரியர்கள் கலைச்செல்வி சின்னதுரை, கலா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாணவி லட்சுமி நன்றி கூறினார்.

