/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பட்டப்பகலில் பைனான்சியரை அவரது காரிலேயே கடத்தி பல தெருக்களில் புகுந்து தப்பிய மர்ம கும்பல் 'அலெர்ட்' ஆக இருந்தும் அப்பட்டமாக கோட்டை விட்ட போலீசார்

ADDED : அக் 29, 2025 02:24 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே, சிவா என்ற பைனான்சியரின் வீடு புகுந்து குடும்பத்தினரை தாக்கி, அவரை, அவரது காரிலேயே மர்ம கும்பல் கடத்தியது; துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார், இறுதியில் கோட்டை விட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த வளத்தியை சேர்ந்தவர் சிவா, 40; பைனான்சியர். சூப்பர் மார்க்கெட் உரிமையாளர். நேற்று காலை, 8:00 மணியளவில், இவரது வீட்டிற்கு, 'மஹிந்திரா சைலோ' காரில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல், பட்டா கத்திகளுடன் வீட்டிற்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை தாக்கியது.
வீட்டிலிருந்தவர்களின் மொபைல் போன்களை அபகரித்து, அங்கிருந்த சிவாவின் பார்ச்சூனர் காரிலேயே அவரை அடைத்து, தாங்கள் வந்த காரில் அனைவரும் ஏறி, மின்னல் வேகத்தில் கார்கள் பறந்தன.
கண்காணிப்பு போலீசாருக்கு தகவல் தெரிந்ததும், அவர்களும் மின்னல் வேகத்தில் செயல்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு, முக்கிய சந்திப்புகளில் கண்காணிப்பு தீவிரமானது.
கடத்தல் கும்பல், வளத்தியிலிருந்து செஞ்சி, திண்டிவனம் வழியாக திருச்சி நோக்கி சென்றது.
நெடுஞ்சாலையில் போலீசார் கண்காணிப்பதை உணர்ந்த கடத்தல் கும்பல், 9:00 மணிக்கு, விழுப்புரம், முத்தாம்பாளையம் பைபாஸ் சந்திப்பில் இருந்து, விழுப்புரம் நகருக்குள் அதிவேகமாக வந்தது.
விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே போலீசாரைக் கண்டதும், மீண்டும் வந்த வழியே திரும்பி, எதிர்ப்புறமாக, விதிகளை மீறி, மின்னல் வேகத்தில் சென்றது. போகும் பாதையில், நான்கு இடங்களில் இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளி, மர்ம கும்பல் தப்பியது.
விழுப்புரம் முழுதும் போலீசார், 'அலெர்ட்' ஆக இருந்ததை அறிந்த கும்பல், விழுப்புரம் பைபாஸ், ஜானகிபுரம் அருகே, சிவாவையும், அவருடைய பார்ச்சூனர் காரையும் விட்டுவிட்டு, சைலோ காரில் தப்பிச்சென்றது; போலீசார் காரையும், சிவாவையும் மீட்டனர்.
விழுப்புரம் டி.எஸ்.பி., கந்தசாமி தலைமையில் தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை பின் தொடர்ந்து சென்றும், அவர்களை பிடிக்க முடியவில்லை.
பின்னணி இதுதானோ?
சிவா மதுரையில் வசித்த போது, பலரிடமும் கடன் பெற்று திருப்பி தராமல், வளத்திக்கு குடிபெயர்ந்ததால், கடன் கொடுத்தவர்கள் கூலிப்படையை வைத்து கடத்தி இருக்கலாம் என, முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வளத்தி போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.