/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செய்தி சில வரிகளில்...விழுப்புரம்
/
செய்தி சில வரிகளில்...விழுப்புரம்
ADDED : நவ 07, 2025 07:16 AM

ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சியின், மண்டல நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர்கள் தமிழரசன், கஜேந்திரன், திருநாவுக்கரசு தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ருசேந்திரகுமார் சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், பட்டியலின மக்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயனாளிகளுக்கு நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
செயற்குழு கூட்டம் அகில இந்திய எஸ்.சி., - எஸ்.டி., ரயில்வே தொழிற்சங்கம் விழுப்புரம் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நடந்தது. கிளைச் செயலாளர் சண்முகராஜா தலைமை தாங்கினார். உதவி செயலாளர் கவுதமி முன்னிலை வகித்தார். தெற்கு மண்டல அமைப்பு செயலாளர் இருசப்பன் சிறப்புரையாற்றினார்.
பொருளாளர் ராஜ்குமார் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், அனைத்து அலுவலகங்களில் உள்ள எஸ்.சி., - எஸ்.டி., காலி பணியிடங்கைள உடனே நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அறிவியல் கண்காட்சி கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சிக்கு, தலைமை ஆசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். ஆங்கில ஆசிரியர் ஜெயராஜ்பிரபு வரவேற்றார். பள்ளி ஆசிரியர்கள் புருஷோத்தமன், கோவிந்தன், அன்பரோஸ் ரேகா முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சண்முகம் கண்காட்சியை ஒருங்கிணைத்தார். சிறப்பு விருந்தினர் பெரியதச்சூர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் 56 அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சிற்றம்பலம் காந்தி மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பாலமுரளி தலைமை தாங்கினார்.வானுார் சட்டப்பணிகள் குழு வழக்கறிஞர் அழகுமுருகன், வானுார் வழக்கறிஞர் சங்க செயலாளர் இதயவேந்தன், வழக்கறிஞர்கள் ராமதாஸ், கலைமாறன் ஆகியோர் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதனை ஒழிப்பது குறித்தும் மாணவ, மாணவியர்களிடம் விளக்கி பேசினர்.
வாக்காளர் பட்டியல்: எம்.எல்.ஏ., ஆய்வு திண்டிவனம் நகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் பேரில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வாக்காளர் படிவம் வழங்கும் பணி நடந்து வருகிறது. 18வது வார்டில் படிவம் வழங்கப்பட்ட வாக்காளர்களிடம், திண்டிவனம் தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,அர்ஜூனன் ஆய்வு செய்தார். முன்னாள் நகரமன்ற தலைவர் வெங்கடேசன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம் உடனிருந்தனர்.
வாக்காளர் பட்டியல் ஆய்வு திருக்கோவிலுார் தொகுதி, வடமலையனுார் ஊராட்சியில் உள்ள 206, 207 பூத்களில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் குறித்தும், பூத் முகவர்கள், உறுப்பினர்கள் நோட்டுகள் பூர்த்தி செய்யும் பணிகளை, தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளர் கவுதம சிகாமணி ஆய்வு செய்தார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர் தீனதயாளன், நகர செயலாளர் கோபிகிருஷ்ணன் உடனிருந்தனர்.
மாணவர்களுக்கு பரிசளிப்பு திண்டிவனம் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகளில் காலாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களை பாராட்டி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஆர்ம்ஸ்டிராங் தலைமை தாங்கினர். தாளாளர் செல்லதுரை 112 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கினார். இதே போல் காலாண்டு தேர்வு வரை நிற்காமல் பள்ளிக்கு வருகை தந்த மாணவ, மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் விழுப்புரத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். துணை செயலாளர் சர்மிளா தொடக்க உரையாற்றினார். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் முத்துக்குமரன், செயலாளர் பாலகிருஷ்ணன், அங்கன்வாடி சங்க மாவட்ட செயலாளர் மலர்விழி, பொருளாளர் சினேகலதா கோரிக்கை வலியுறுத்தி பேசினர். அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் நடந்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மாநில நிர்வாகிகள் செயற்குழு கூட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில பொது செயலாளர்கள் மாசிலாமணி, நடராஜன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், அனைத்து வேளாண் விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வரும் 26 ம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும், மக்களை திரட்டி கருப்பு பட்டையோடு அரை நாள் தர்ணாவில் ஈடுபடுவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பன்றிகள் பிடிப்பு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் பானுமதி உத்தரவின் பேரில், சுகாதார அலுவலர் செந்தில்குமார் மேற்பார்வையில் நேற்று முன்தினம் மாலை, முருங்கப்பாக்கம், சிவசக்திநகர், எம்.ஜி.ஆர்.நகர், திருவள்ளுவர் நகர்,சஞ்சீவிராயன்பேட்டை முதல் தெரு உள்ளிட்ட இடங்களில் சுற்றித்திரிந்த 64 பன்றிகளை வலை வைத்து பிடித்தனர். பிடிக்கப்பட்ட பன்றிகள் அனைத்தும் சேலத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

