/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
/
மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு
ADDED : நவ 07, 2025 11:15 PM
விழுப்புரம்: மனைவியை தாக்கி, மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம், சண்முகாபுரம் காலனி தங்கராஜ் லே அவுட்டைச் சேர்ந்தவர் கார்த்தி, 40; இவரது மனைவி லட்சுமி, 37; இருவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி, கார்த்தியை பிரிந்து விழுப்புரம் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கில் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு லட்சுமி, மாவட்ட கோர்ட் வளாகம் எதிரில் நடந்து சென்றார். அப்போது, கார்த்தி, அவரை வழிமறித்து தாக்கி, மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் தாலுகா போலீசார், கார்த்தி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

