/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிருபானந்த வாரியார் குரு பூஜை விழா
/
கிருபானந்த வாரியார் குரு பூஜை விழா
ADDED : நவ 07, 2025 11:15 PM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் பழனிவேலு மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கிருபானந்த வாரியார் குரு பூஜை விழா நடந்தது.
வாரியார் இலக்கிய பேரவை சார்பில் நடந்த விழாவிற்கு, பேரவைத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் ரமேஷ், துணைத் தலைவர் பாரதிதாசன் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வாசுகி வரவேற்றார்.
விழாவில், ஜெயராஜேந்திரன் கிருபானந்த வாரியாரின் ஆன்மிக பணிகள் மற்றும் சமய தொண்டுகள் குறித்து மாணவர்களிடையே பேசினார்.
தொடர்ந்து கிருபானந்த வாரியாரின் உருவச்சிலைக்கு தீபாராதனை நடந்தது.
ஐ.டி.ஐ., மேலாளர் செல்லம்மாள், கல்வி நிறுவன பூசாரி எழிலரசன், பள்ளி பட்டதாரி ஆசிரியைகள் சுவாதி, மஞ்சுளா, தாட்சாயினி மற்றும் ஐ.டி.ஐ., பயிற்சி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

