ADDED : நவ 07, 2025 11:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: வல்லம் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, சேர்மன் அமுதா ரவிக்குமார் தலைமை தாங்கினார். பி.டி.ஓ., க்கள் ராமதாஸ், சிலம்புச்செல்வன் முன்னிலை வகித்தனர். மேலாளர் முத்துவேல் வரவேற்றார். இளநிலை உதவியாளர் சிவானந்தம் தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில், ஒன்றிய செலவினங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
தொடர்ந்து ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளையும், வீடு கட்டும் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என சேர்மன் கேட்டுக் கொண்டார்.
துணைச் சேர்மன் மலர்விழி அண்ணாதுரை, ஒன்றிய கவுன்சிலர்கள் இந்துமதி, அமிர்தம், கோமதி, ராஜேந்திரன், பத்மநாபன், ஏலக்கன்னி, லட்சுமி, சிலம்பரசி விஜயா, கம்சலா, கோபால், கலைவாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

