/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பொய் வழக்கு போட முயற்சி ஊராட்சி தலைவர் புகார் மனு
/
பொய் வழக்கு போட முயற்சி ஊராட்சி தலைவர் புகார் மனு
ADDED : பிப் 09, 2025 06:39 AM
விழுப்புரம்: பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சிப்பதாக, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் மனு அளித்தார்.
வல்லம் அடுத்த ஈச்சூர் ஊராட்சி தலைவர் பரணிதரன் கிராமக்களுடன் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த மனு:
கடந்த 2021ம் ஆண்டு முதல் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருகிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, துணைத் தலைவர் துாண்டுதலால், என் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் மீது செஞ்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 28 ம் தேதி நடந்த விசாரணையில், நான் குற்றமற்றவன் என தெரிய வந்தது. இதனால், என் மீதான புகாரில் வழக்கு பதியப்படவில்லை.
இந்நிலையில், தற்போது பொய் வழக்கு பதிவு செய்ய முயற்சிப்பதாக தெரிய வருகிறது. எனவே, எஸ்.பி., தலையிட்டு, என் மீது டி.எஸ்.பி., அலுவலத்தில் நிலுவையில் உள்ள பொய்யான புகாரை ரத்து செய்திட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

