/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
/
2 பேரை கத்தியால் வெட்டியவர் கைது
ADDED : அக் 15, 2024 06:11 AM

மயிலம்: மயிலத்தில் முன்விரோதம் காரணமாக 2 பேரை கத்தியால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம், ஆரணியார் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 38; காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 40; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வுந்தது.
நேற்று முன்தினம் மாலை மயிலம் - புதுச்சேரி சாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
அப்போது, ரஞ்சித்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுமுகத்தை வயிற்றில் குத்தினார். இதனைத் தடுக்க முயன்ற பட்டிக்கொட்டா தெருவைச் சேர்ந்த சுந்தர், 30; என்பவரின் கையில் வெட்டினார்.
காயமடைந்த இருவரும் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனர்.