/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு
/
தாலுகா ஆபீசில் தீக்குளித்தவர் சாவு
ADDED : செப் 29, 2024 02:49 AM

அவலுார்பேட்டை:மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகி ச்சை பலனின்றி இறந்தார்.
விழு ப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் மகன் மோகன்ராஜ், 33; இவர், நேற்று முன்தினம் மதியம் 1:00 மணியளவில், தாலுகா அலுவலகத்தில் தன் நிலத்தை 23 பேர் அபகரிக்க முயல்வதாக கூறி உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பினர்.
பின், சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று காலை 11:00 மணிக்கு இறந்தார்.
வளத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.