sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தரம்... குறைகிறது; அமைச்சர்கள், உயரதிகாரிகள் கவனிப்பார்களா?

/

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தரம்... குறைகிறது; அமைச்சர்கள், உயரதிகாரிகள் கவனிப்பார்களா?

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தரம்... குறைகிறது; அமைச்சர்கள், உயரதிகாரிகள் கவனிப்பார்களா?

மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின் தரம்... குறைகிறது; அமைச்சர்கள், உயரதிகாரிகள் கவனிப்பார்களா?

1


ADDED : ஆக 28, 2024 07:42 AM

Google News

ADDED : ஆக 28, 2024 07:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் தரம் உயர அமைச்சர்கள், மருத்துவத்துறை உயரதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கடந்த 2010ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.

இம்மருத்துவமனையில் விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வெளி மற்றும் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

ஆரம்ப காலத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத இருந்த மருத்துவமனை படிப்படியாக புற்று நோய் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு மருத்துவமனை மேம்பாடு அடைந்துள்ளது.

ஆனால், அனைத்து வசதிகள் இருந்தும் சிகிச்சையளிப்பதில் பின்தங்கியுள்ளது. பொதுமக்கள் அவசர சிகிச்சைக்காக வந்து சிகிச்சை பெற்று உள்நோயாளியாக சேர்ந்து மருத்துவ பரிசோதனைகள் எடுத்து அதன் பிறகு சிகிச்சை துவங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஆனால், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் வந்து சேர குறைந்தது 3 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதனால், சிகிச்சை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனால், நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் மருத்துவமனை மீது அதிருப்தியடைந்து, அவர்களாக வே தங்களை டிஸ்சார்ஜ் செய்யும்படி கேட்டுக் கொண்டு, புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட வெளி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்று விடுகின்றனர்.

இம்மருத்துவமனையில் மருத்துவ ஆய்வகம் மற்றும் ஸ்கேன் பிரிவுகளில் போதிய பணியளர்கள் இல்லை.

மேலும், முறையான தலைமை இல்லாததால் கடந்த ஓர் ஆண்டாக மருத்துவமனையின் தரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இம்மருத்துவமனையைப் பொறுத்தவரை மாவட்ட பேதம் பார்ப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஒரு விபத்து ஏற்பட்டால் உயிர் காப்பதற்காக எந்த மருத்துவமனை அருகில் உள்ளதோ அந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறுவது தான் இயல்பு.

ஆனால், இம்மருத்துவமனையில் விபத்திலோ, அல்லது மோதல் காரணமாகவோ காயமடைந்து சிகிச்சை பெற்று இறந்தால், இறந்த நபர் எந்த மாவட்டமோ அந்த மாவட்டத்திற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனால், வெகுஜன மக்கள் அதற்குரிய செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

அதுமட்டு மின்றி, மருத்துவமனையில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வார்டு களிலும் குடிநீர் விநியோகம் செய்த நிலை மாறி, தற்போது குடிநீருக்காக வெளியே கேன்டினில் விற்கப்படும் தண் ணீரை வாங்கும் நிலையில் நோயாளிகள் உள்ளனர்.

மருத்துவமனையில் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக சமீப காலமாக வார்டுகளில் நோயாளிகள் மற்றும் அட்டென்டர்களின் மொபைல் போன்கள், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவது போலீசுக்கு பெரும் சவாலாக உள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி அமைச்சர்கள் மற்றும் மருத்துவத் துறை உயரதிகாரிகள் திடீர் ஆய்வு செய்து, மருத்துவமனையில் உள்ள சீர்கேடுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us