/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி அடாவடி; வாகன ஓட்டிகள் கடும் அவதி; கண்டு கொள்ளாத செஞ்சி போலீஸ்
/
நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி அடாவடி; வாகன ஓட்டிகள் கடும் அவதி; கண்டு கொள்ளாத செஞ்சி போலீஸ்
நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி அடாவடி; வாகன ஓட்டிகள் கடும் அவதி; கண்டு கொள்ளாத செஞ்சி போலீஸ்
நடுரோட்டில் பஸ்சை நிறுத்தி அடாவடி; வாகன ஓட்டிகள் கடும் அவதி; கண்டு கொள்ளாத செஞ்சி போலீஸ்
ADDED : மே 13, 2025 01:10 AM

செஞ்சி வழியாக திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூருவில் இருந்து சென்னை, புதுச்சேரிக்கு செல்லும் பஸ்கள் செஞ்சி பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. செஞ்சியில் இருந்து சென்னை, புதுச்சேரி, திண்டிவனம் செல்லும் பயணிகள் திருவண்ணாமலை சாலை பஸ் நிறுத்தத்தில் நின்று பஸ் ஏறுகின்றனர்.
இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு இருப்பதால் சாலை குறுகளாக உள்ளது. இப்பகுதியில், செஞ்சியில் இருந்து சென்னை செல்லும் பஸ்களை வரிசையாக நிறுத்தி விடுகின்றனர். மீதமுள்ள இடத்தில் திருவண்ணாமலை மார்க்கம் இருந்து வரும் பஸ்களை வழியை மறித்து நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர்.
இந்த பஸ்களில் ஏறும் பயணிகளின் கூட்டத்தை பொறுத்து, 2 முதல் 5 நிமிடம் வரை போக்குவரத்து தடை ஏற்படுகிறது. போக்குவரத்து அதிகம் உள்ள இடம் என்பதால் உடனே அரை கி.மி., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று விடுகின்றன.
ஒரு பஸ் புறப்பட்டதும் அடுத்த பஸ்சையும் அதே இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் போக்குவரத்த நெரிசலில் உடனடியாக சரியாவதில்லை. இதில் சிக்கும் வாகனங்கள் சில நேரம் 15 நிமிடம் வரை காத்திருக்கும் நிலை உள்ளது. சில நேரம் ஆம்புலன்ஸ்களும் இந்த இடத்தை கடக்க முடியாமல் சிக்கி கொள்கின்றன.
போக்குவரத்து நெரிசலில் சிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுப்பாகி, எதிர்புற சாலையில் விதிமுறைகளை மீறி ஆபத்தான முறையில் செல்லும்போது, பல முறை விபத்து நடந்துள்ளது. இப்பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை இரண்டாக பிரித்து பேரிகார்டுகளை அமைக்க வேண்டும்.
ஒரு வழியில் பயணிகளை ஏற்றும் பஸ்களுக்கும், மற்றொரு வழியை மற்ற வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யலாம். ஆனால், செஞ்சி போலீசார் வாகன ஓட்டிகளின் அவதியை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருக்கின்றனர். இது பொது மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.