/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
/
மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் 2ம் நாளாக காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 10:19 PM

விழுப்புரம் : விழுப்புரத்தில் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர், 2ம் நாளாக பணியை புறக்கணித்து அரசு அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும் வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து அரசு அலுவலகங்கள் வாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று 2ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், நிர்வாகிகள் சரவணன், வெங்கடபதி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் சங்கரலிங்கம் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் ஆர்.டி.ஓ., அலுவலகம், திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு அலுவலகம், திண்டிவனம் சிப்காட் பிரிவு அலுவலகம் மற்றும் விழுப்புரம், வானுார், திண்டிவனம், கண்டாச்சிபுரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனுார், திருவெண்ணெய்நல்லுார், மரக்காணம் ஆகிய 9 தாலுகா அலுவலகங்களிலும், 14 இடங்களில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
வருவாய்த்துறை அலுவலர்களின் பணித்தன்மையைக் கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம். தனி ஊதியம் வழங்க வேண்டும். வருவாய்த் துறையில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து தாலுகாக்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கென புதிய துணை தாசில்தார் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால், வருவாய்த்துறை தொடர்பான பல்வேறு பணிகள் பாதித்துள்ளது.