/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
/
மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாவட்டத்தில் ஆற்றுத்திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 17, 2025 06:32 AM
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், நாளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஆற்றுத்திருவிழா கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில்,ஆற்றுத்திருவிழா நாளை (ஜன.18) நடைபெற உள்ளது.
மாவட்டத்தில் தென்பெண்ணை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி ஆறு, பம்பை ஆற்றங்கரையோரம் உள்ள கிராமப் பகுதிகளில் ஆற்றுதிருவிழா கொண்டாடப்படுகிறது.
தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அருகே பிடாகம், அத்தியூர் திருவாதி, பேரங்கியூர், எல்லீஸ் சத்திரம், அண்ராயநல்லூர், அரகண்டநல்லூர், புதுப்பாளையம், மேட்டுப்பாளையம், சின்னகல்லிப்பட்டு, கலிஞ்சிக்குப்பம் பகுதிகளிலும், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை உள்ளிட்ட 20 இடங்களில், பொது மக்கள் ஆறுகளில் திரண்டு வந்து, ஆற்றுத்திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சுற்றுப்புற கிராமங்களில் இருந்து, கோவில் உற்சவ மூர்திகள் ஆறுகளுக்கு கொண்டு வந்து தீர்த்தவாரி உற்சவமும் நடக்கிறது.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை தரப்பில், அந்தந்த ஆற்றுத் திருவிழா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளனர்.