/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
துருவை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கன மழையால் சேதம்
/
துருவை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கன மழையால் சேதம்
துருவை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கன மழையால் சேதம்
துருவை கிராமத்திற்கு செல்லும் தார் சாலை கன மழையால் சேதம்
ADDED : டிச 23, 2024 06:39 AM

வானுார்: துருவை கிராமத்திற்குச் செல்லும் தார் சாலை கடந்த பெஞ்சல் புயலில் படுமோசமாக மாறி விட்ட தால் அதனை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில், துருவை கிராமம் உள்ளது. துருவை கிராமம் வழியாக ஒட்டம்பாளையம், ராயப்பேட்டை, புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவி நகர், ஆலங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் சென்று வருகின்றனர்.
இந்த கிராமத்திலுள்ள சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பிரதான சாலை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது.
இந்நிலையில், கடந்த பெஞ்சல் புயல் மற்றும் கன மழை காரணமாக தற்போது, இந்த தார் சாலையில் ஆங்காங்கே மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகனங்கள் செல்வதற்கு லாயக்கற்ற இந்த சாலையை புதுப்பிக்க அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

