
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்; விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு, பணி நிறைவு பாராட்டு விழா, மாவட்ட பொதுக்குழு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார்.
அமைப்பு செயலாளர் ஆரோக்கியதாஸ் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பாரி, நிர்வாகிகள் பழனி, செந்தில்குமார், அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வு ஊதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். உழைப்பு ஊதியம், மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
எம்.பில்., ஊக்க ஊதிய தணிக்கை தடையை நீக்க வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

