/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த வாகனங்கள்; கிறிஸ்துமஸ் பண்டிகை எதிரொலி

ADDED : டிச 25, 2024 06:42 AM

விக்கிரவாண்டி : கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் பயணித்தன. கடந்த நான்கு நாட்களில் 1,44,500 வாகனங்கள் சென்றன.
இன்று 25ம் தேதி கிறிஸ்துஸ் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுறையாக உள்ளது. மேலும் பள்ளி அரையாண்டு தேர்வு முடிந்து, நேற்று 24ம் தேதி முதல் ஜன 1ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதையடுத்து, கடந்த 21ம் முதல் சென்னையில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் பலர் பஸ், கார், வேன், பைக் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊருக்கு செல்ல துவங்கினர்.
இதனால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கடந்த 21,22, 23ம் தேதிகளில் 1 லட்சத்து 13,500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றன. நேற்றும் தென் மாவட்டங்களை நோக்கி அதிகளவில் வாகனங்கள் சென்றன.
இரவு 7.00 மணி வரை 31 ஆயிரம் வாகனங்கள் டோல்பிளாசாவை கடந்தன. வாகனங்கள் 8 லேன்கள் வழியாக அனுமதிக்கப்பட்டதால் நெரிசலின்றி கடந்து சென்றன.