ADDED : செப் 17, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,: பஸ்சில் பெண்ணிடம், 3 சவரன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி செல்வி, 57; இவர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இருந்து அரசு பஸ்சில் ஏறி, முத்தாம்பாளையம் கூட்ரோட்டில் இறங்கினார்.
அங்கு இறங்கி பார்த்தபோது அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் செயினை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.