ADDED : ஜூலை 13, 2026 02:57 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: வளவனுார் அருகே வாலிபர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
விழுப்புரம் அடுத்த வி.அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலிவரதன் மகன் எழிலரசன், 40; சற்று மனநலம் பாதித்து வீட்டில் இருந்து வந்த எழிலரசனை, கடந்த 7ம் தேதி காலை முதல் காணவில்லை.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
