/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
/
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : ஏப் 27, 2025 04:45 AM
விழுப்புரம் : பில்லுார் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
விழுப்புரம் அடுத்த பில்லுார் பிடாரியம்மன், அய்யனாரப்பன், திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா மற்றும் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீப திருவிழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன்தினம் முக்கிய விழாவான தீ மிதி திருவிழா நடந்தது.
அதனையொட்டி அன்று காலை 9:00 மணிக்கு அரவாண் அழைப்பும், 11:00 மணிக்கு படுகளம் போடுதலும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீமிதி விழாவும் நடந்தது.
திரளான பக்தர்கள் தீ மதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 8:00 மணிக்கு சுவாமிகள் வீதியுலா நடந்தது.
நேற்று காலை 10:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் நிறைவடைந்தது.