/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
/
திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED : மே 06, 2025 05:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: நல்லாண் பிள்ளை பெற்றாள் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடந்தது.
செஞ்சி அடுத்த நல்லாண் பிள்ளை பெற்றாள் திரவுபதியம்மன் கோவில் 103ம் ஆண்டு தீமிதி விழா கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 20 நாட்கள் மகா பாரத சொற்பொழிவு நடந்தது.
இதன் நிறைவாக 4ம் தேதி காலை 7.00 மணிக்கு செத்தவரை சிவஜோதி மோனசித்தர் தலைமையில் மகா யாகமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
பகல் 2 மணிக்கு துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு சக்திகரகம் வீதி உலாவும், தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் பக்தர்கள் தீமிதித்தல் நடந்தது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.