/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சின்னபாபுசமுத்திரத்தில் நாளை தீமிதி விழா
/
சின்னபாபுசமுத்திரத்தில் நாளை தீமிதி விழா
ADDED : ஏப் 10, 2025 04:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டமங்கலம்: சின்னபாபுசமுத்திரம் திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா நாளை 11ம் தேதி மாலை நடைபெறுகிறது.
கண்டமங்கலம் அடுத்த சின்னபாபுசமுத்திரம் கிராமத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற திரவுபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, சின்னபாபுசமுத்திரம், கண்டமங்கலம், பண்ணக்குப்பம், தாண்டவமூர்த்திக்குப்பம், அனந்தபுரம், கெண்டியங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான தீமிதி திருவிழா நாளை 11ம் தேதி மாலை நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.