/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தீவனுார் விநாயகர் கோவில் 1008 பால்குட ஊர்வலம்
/
தீவனுார் விநாயகர் கோவில் 1008 பால்குட ஊர்வலம்
ADDED : மே 07, 2025 11:52 PM

திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலின், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பால் குட ஊர்வலம் நடந்தது.
திண்டிவனம்-செஞ்சி ரோட்டிலுள்ள தீவனுாரில் சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, தினந்தோறும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று காலை 9:00 மணிக்கு, 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது.
காய்கறி, பழங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் பொய்யாமொழி விநாயகர், கோவில் நுழைவு வாயிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டார். பக்தர்கள் பால்குடம் ஏந்தி நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக வந்தனர். வரும் 9ம் தேதி திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.